Gavitha / 2020 டிசெம்பர் 06 , பி.ப. 09:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடளாவிய ரீதியில், நேற்று (05) மாத்திரம், 14,125 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது, இதுவரைகாலமும் ஒரு நாளில் எடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் அதிகளவான அளவு எடுக்கப்பட்ட பரிசோதனையாக பதியப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி முதல், நாடளாவிய ரீதியில், 903,280 பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் கடந்த நவம்பர் 17ஆம் திகதி, அதிகளவான பரிசோதனையாக 13,671 பரிசோதனைகள் எடுக்கப்பட்டிருந்தன.
இதேவேளை, நேற்று முன்தினம் 669 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 27,228ஆக உயர்வடைந்திருந்தது.
நேற்று முன்தினம் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில், கொழும்பு மாவட்டத்தில் இருந்து 204 தொற்றாளர்களும், கண்டி, கம்பஹாவில் இருந்து முறையே 170, 111 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மினுவாங்கொடை, பேலியகொட கொத்தனி, 23,670ஆக அதிகரித்துள்ளது.
2 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago