2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

900 சிறுவர்கள் புற்றுநோயால் பாதிப்பு

J.A. George   / 2023 செப்டெம்பர் 27 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆண்டுதோறும் சுமார் 900  சிறுவர்களுக்கு புற்றுநோய் பாதிப்புகள் கண்டறியப்படுவதாக சசுகாதார அமைச்சின் தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது.

சிறுவர் புற்றுநோயாளர்கள் தொடர்பில் ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் மாதம் விழிப்புணர்வு நிகழ்ச்சி அமுல்படுத்தப்படுவதாக வைத்தியர் சுராஜ் பெரேரா தெரிவித்தார்.

"சிறுவர் புற்றுநோய் என்பது பிறந்தது முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு ஏற்படும் புற்றுநோயாகும். 

புதிதாக 471 சிறுவர்கள் மற்றும் 454 சிறுமிகள் குழந்தை பருவ புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 800 முதல் 900 நோயாளிகள் கண்டறியப்படுகிறார்கள். பெரும்பாலான புற்றுநோய்களை சிகிச்சையின் மூலம் குணப்படுத்த முடியும். 

வயது வந்தோருக்கான புற்றுநோய்களுடன் ஒப்பிடுகையில், குழந்தை பருவ புற்றுநோய்கள் 80% முதல் 90% வரை குணப்படுத்தக்கூடியவை." என அவர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X