Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Mayu / 2023 டிசெம்பர் 12 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரவு நேர இசை நிகழ்வு(DJ Night) என்ற பெயரில் களியாட்ட நிகழ்வுகளை ஏற்றுக்கொள்ள முடியாது அனுமதியின்றி நடாத்தப்பட்ட நிகழ்வுக்கு எதிராக யாழ் மாநகர சபை வழக்கு தொடர வேண்டும் என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தன், கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்றைய தினம் (11) திங்கட்கிழமை ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இரவு நேர இசை நிகழ்வு (DJ Night) என்ற பெயரில் களியாட்ட நிகழ்வொன்று, யாழ் மாநகர சபையின் அனுமதியையும் மீறி மீளவும் நடத்தப்பட்டதாக அறிகிறோம்.
இவ்வாறாக சமூகத்தை சீரழித்து வருமானம் உழைப்பதை இவர்கள் கைவிடவேண்டும். இதற்கு எதிராக நாம் போராட வேண்டிய சூழல் வரும்.
குறித்த நிகழ்வுக்கு யாழ் மாநகர சபையிடம் அனுமதி கோரப்பட்டு நிராகரிக்கப்பட்ட நிலையில் அந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமான செயற்பாடு. இதற்கு எதிராக மாநகர சபை நடவடிக்கை எடுக்க முடியும்.அனுமதியின்றி நடாத்தப்பட்ட நிகழ்வுக்கு எதிராக யாழ் மாநகர சபை வழக்கு தொடர வேண்டும்.
குறித்த விடயத்தில் சமூக நலனில் அக்கறை கொண்ட அனைவரும் ஒன்று திரண்டு எமது எதிர்ப்பை காட்டவேண்டும். மிகவிரைவில் இதற்கான எதிர்ப்பை பதிவு செய்வோம். என அவர் தெரிவித்துள்ளார்.
எம்.றொசாந்த்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
46 minute ago
6 hours ago