2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

FCIDக்கு வாக்குமூலம் அளிக்குமாறு யோஷிதவுக்கு உத்தரவு

Menaka Mookandi   / 2016 ஏப்ரல் 28 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனம் தொடர்பான நிதி மோடிச விவகாரம் தொடர்பில், எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதி முதல் இரண்டு வாரக் காலப்பகுதிக்குள், கொழும்பு - கொள்ளுபிட்டியில் அமைந்துள்ள நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்குச் சென்று வாக்குமூலம் அளிக்குமாறு, கடுவெல நீதவான் நீதிமன்றத்தினால், யோஷித ராஜபக்ஷ மற்றும் நிராந்த ரணதுங்க உள்ளிட்ட, ஐவருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணையை, எதிர்வரும் மே 5ஆம் திகதிக்கு ஒத்திவைத்த கடுவெல பதில் நீதவான் ஹேமந்த வெத்தசிங்க, நீதிமன்றம் அழைப்பாணை விடுக்கும் போது நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, மேற்படி ஐந்து சந்தேகநபர்களுக்கும் ஆணையிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X