2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

LPL ற்கு அது சரிப்பட்டு வராது

Simrith   / 2023 ஓகஸ்ட் 16 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அணியின் முன்னாள் அதிரடி துடுப்பாட்ட வீரர் சனத் ஜெயசூரிய, பிரேமதாச மைதானத்தின் ஆடுகளங்களை மோசமானவை என  அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

ஐபிஎல் போட்டிகள் இடம்பெறும் ஆடுகளங்களையே அவர் இவ்வாறு கடுமையாக விமர்சித்துள்ளார்.

வேகமாக அடித்தாடுவதற்கு உகந்த ஆடுகளங்கள் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

எல்பிஎல் போட்டிகளுக்கான பிரேமதாச மைதானத்தின் மோசமான ஆடுகளங்கள் குறித்து ஏமாற்றமடைந்துள்ளேன் என தெரிவித்துள்ள அவர் அடுத்த சுற்றுதகுதிகான் போட்டிகள் சிறந்த ஆடுகளத்தில் இடம்பெறும் என  எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.  .

பிரேமதாச மைதானத்தின் ஆடுகளம் துடுப்பாட்டத்திற்கு உகந்ததாக காணப்படாததால் அணிகள் அதிக ஓட்டங்களை பெறுவதற்கு சிரமப்படும் நிலை காணப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X