2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

Lion air இலங்கைக்கான முதலாவது பயணத்தை ஆரம்பித்தது

Editorial   / 2019 ஜனவரி 31 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

டீ.​கே.ஜி. கபில

Lion air  விமானமானது தாய்லாந்தின் டொங்மியேங் விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கான முதலாவது விமானப் பயணத்தை நேற்று ஆரம்பித்துள்ளது.

எஸ்.எல்- 230 என்ற விமானமே நேற்று காலை 9.30 மணியளவில் தாய்லாந்தின் டொங்மியேங் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, கட்டுநாயக்கவை வந்தடைந்தது.

குறித்த விமானத்துக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் நீர்த்தாரை வரவேற்பு வழங்கப்பட்டது.

737-900 போயிங் ரக குறித்த புதிய விமானம் மூலம், 122 பயணிகள் 7 அலுவலகப் பணியாளர்களும் இலங்கையை வந்தடைந்தன​ர்.

குறித்த  Lion air   விமான சேவையானது வாரத்தில் ஒவ்வொரு நாளும் தாய்லாந்தின் டொங்மியேங் விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கான பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .