Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
S.Renuka / 2025 மே 14 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஏனைய கட்சிகளை விட அதிக இடங்களைப் பெற்று வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்திக்கு, (NPP) உள்ளூராட்சி நிறுவனங்களில் அதிகாரத்தை நிலைநாட்ட அனுமதிக்க வேண்டும் என்று மக்கள் போராட்ட கூட்டணியின் நிர்வாக உறுப்பினர் துமிந்த நாகமுவ நேற்று தெரிவித்துள்ளார்.
ஊடகத்திற்கு செவ்வாய்க்கிழமை (13) அன்று கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறியுள்ளதாவது,
தேசிய மக்கள் சக்தி ஏனைய கட்சிகளை விட தனித்தனியாக அதிக இடங்களைப் பெற்றது என்பது மக்கள் அவர்களின் கொள்கைகளை ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
அந்தக் கொள்கைகளை அவர்கள் எவ்வாறு செயல்படுத்துகிறார்கள் என்பதைப் பார்த்து மக்கள் தீர்மானிக்க அனுமதிக்கப்பட வேண்டும்.
அத்துடன், சதித்திட்டங்கள் மூலம் ஆளும் கட்சியின் அதிகாரத்தை யாரும் பறிக்க முயற்சிக்கக் கூடாது.
மக்கள் போராட்டக் கூட்டணியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் எந்தவொரு சட்டமன்றத்திலும் அதிகாரத்தை நிறுவுவதில் ஆளும் கட்சியையோ அல்லது எதிர்க்கட்சியையோ ஆதரிக்க மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
39 minute ago
55 minute ago