2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

NPPயிடம் கோரிக்கை விடுத்த வடக்கு கட்சிகள்

R.Tharaniya   / 2025 மே 07 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கில் உள்ள எந்தவொரு உள்ளூராட்சி மன்றத்திலும் எந்த அரசியல் கட்சிகளும் முழுமையான பெரும்பான்மையைப் பெறாததால், வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் வடக்கில் மாநகரசபைகளை நிறுவ தேசிய மக்கள் சக்தியிடம் (NPP) கோரிக்கை விடுத்துள்ளன என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று தெரிவித்தார்.

வடக்கில் உள்ள பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களில் (NPP )இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதாகவும், சில கட்சிகள் வடக்கில்மாநகரசபைகளை அமைக்க தங்கள் ஆதரவை வழங்கியுள்ளன என்றும் அவர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

வடக்கில்( NPP) 150 இடங்களைப் பெற்றுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.

"பெரும்பான்மை இடங்களைப் பெற்ற கட்சிகள் கூட அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக( NPP)க்குத் தெரிவித்துள்ளன. கட்சியின் கொள்கையின்படி நாங்கள் அதைப் பற்றி முடிவு செய்வோம்" என்று அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X