2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

“PTA சட்டம்: அரசாங்கம் இன்னும் விவாதிக்கவில்லை”

S.Renuka   / 2025 ஏப்ரல் 21 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) இரத்து செய்யப்பட்டு, புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மூலம் மாற்றப்படும் வரை அதை அமுல்படுத்துவதற்கு தடை விதிக்கலாமா என்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் (EU) விசாரித்துள்ளது. ஆனால், இலங்கை அரசாங்கம் இன்னும் அதைப் பற்றி விவாதிக்கவில்லை என்று டெய்லி மிரர் செய்திகள் தெரிவித்துள்ளன.

ஐரோப்பிய ஒன்றியம், பிற மேற்கத்திய சக்திகளுடன் சேர்ந்து, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்யக் கோரியுள்ளதுடன், இது ஒரு கடுமையான சட்டமாக மேற்கோள் காட்டியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள், இலங்கை அரசாங்கத்துடனான சமீபத்திய சந்திப்புகளில், தடைச் சட்டம் குறித்தும் விசாரித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியப் பிராந்தியத்தில் உள்ள சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யும் போது, GSP பிளஸ் (+) வர்த்தக வசதியைப் பெற இலங்கைக்கு PTA இரத்து செய்வது ஒரு முன்நிபந்தனையாகும்.

முந்தைய அரசாங்கம் PTA செயல்படுத்தலுக்கு தடை விதித்தது. அது ஒரு பயங்கரவாத எதிர்ப்பு மசோதாவை (ATB) அறிமுகப்படுத்தியது.

இருப்பினும், குறித்த சட்டம்  கடுமையானது என கூறி, ஐரோப்பிய ஒன்றியமும் அந்த மசோதாவில் மகிழ்ச்சியடையவில்லை.

புதிய அரசாங்கம் PTA இன் விதிகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.

அரசாங்கம் தடைக்காலம் குறித்து பரிசீலிக்குமா? என்று கேட்டதற்கு, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, "அரசாங்கம் இன்னும் அதைப் பற்றி விவாதிக்கவில்லை" என்றார்.

இருப்பினும், பயங்கரவாதத் தடைச் சட்டம் 'விரைவில்' இரத்து செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக ஒரு புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றார்.

இது முந்தைய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ATB தானா என்று கேட்டதற்கு, "நாங்கள் இன்னும் அதற்குப் பெயரிடவில்லை. ஒரு குழு அதில் செயல்பட்டு வருகிறது" என்று பதிலளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X