Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஓகஸ்ட் 23 , பி.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
பயங்கரவாத தடைச் சட்டத்தை (PTA) பயன்படுத்துவதை தவிர்க்குமாறும், தடுப்பு உத்தரவுகளை உடனடியாக இரத்து செய்யுமாறும் ஜனாதிபதி மற்றும் சட்ட அமுலாக்க அதிகாரிகளை கேட்டுக்கொள்வதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) தெரிவித்துள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஏற்பாடுகளைப் பயன்படுத்தி அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்ட நபர்களைக் கைது செய்து தடுத்து வைப்பது குறித்து ஆழ்ந்த கவலை கொள்வதாக சங்கம் அறிவித்துள்ளது.
சங்கம் வெளியிட்ட ஊடக அறிக்கையில் மேற்குறிப்பிட்ட விடயம் தெரிவிக்கப்பட்டிருந்ததுடன், அதில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தாவது,
ஏப்ரல் 9 ஆம் திகதி முதல் இடம்பெற்ற போராட்டங்களின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் சில சந்தேக நபர்கள் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
அன்றிலிருந்து 90 நாட்களுக்கு தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி கையொப்பமிட்டு, பயங்கரவாத தடைச் சட்டத்தின் 9ஆவது பிரிவின் கீழ் ஆர்ப்பாட்டக்காரர்கள் மூவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத தடைச் சட்டம் என்பது ஒரு கொடூரமான சட்டமாகும். இது நீண்ட காலத்துக்கு நபர்களை கைது செய்து காவலில் வைக்க நிர்வாகிக்கு பரந்த அதிகாரங்களை வழங்குகிறது.
பயங்கரவாதச் சூழ்நிலைகளுக்கு தீர்வு காண்பதே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் நோக்கமாகும் எனவும் அரசாங்கத்துக்கு எதிரான கருத்துகளை வெளிப்படுத்தும் போது ஏற்பட்டுள்ள குற்றச் செயல்களுக்குத் தீர்வு காண்பது இல்லை என்றும் சங்கம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் நீட்டிப்பு வழங்குவதில் பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவது கவலைக்குரிய விடயமாக பார்க்கப்படுவதாகவும் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2 hours ago
3 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago
9 hours ago