Editorial / 2019 ஜூலை 18 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.நிரோஸ்
தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழான விண்ணப்பத்தை, அமைச்சர் திகாம்பரத்தின் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள், சமுதாய அபிவிருத்தி அமைச்சு ஏற்றுக்கொள்ள மறுப்புத் தெரிவித்தது.
2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்கத் தகவல் அறிந்துகொள்ளும் உரிமைச் சட்டத்தின் கீழ் குறித்த விண்ணப்படிவம் நேற்று(17) நேரடியாக திகாவின் அமைச்சுக்கு சென்று கையளித்தபோதே RTIஐ விண்ணப்பத்தை அந்த அமைச்சின் சிரேஷ்ட உதவிச்செயலாளர் திருமதி வி.அருள்ராஜ் என்ற அதிகாரி ஏற்கமறுத்தார்.
தகவலை அறிந்துகொள்வதற்கான விண்ணப்பத்தை பதிவு தபாலில் அனுப்ப வேண்டுமெனக் கடுந்தொனியில் கூறிய அவர், தகவலை அறிந்துகொள்வதற்கான விண்ணப்பங்கள் மேலதிக செயலாளர் திருமதி துரைசாமியிடமே வழங்க வேண்டுமெனவும் கூறினார்.
மேலதிக செயலாளரான திருமதி துரைசாமி வெளிநாடுக்கு சென்றிருப்பதாகக் கூறிய அவர், அலுவலக நேரம் முடிந்துவிட்டதாகவும் அதனால், இந்த விண்ணப்பத்தைத் தான் ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் கூறினார்.
எனினும், அலுவலக நேரம் முடிவதற்கு முன்பே விண்ணப்பத்தை வழங்க சென்றிருந்தபோதிலும், அலுவலக நேரம் முடிந்துவிட்டதாக காரணம்கூறி விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ள மறுப்புத் தெரித்தார்.
இதேவேளை, அமைச்சர் திகாம்பரத்தின் அமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் தகவல் அதிகாரியின் மின்னஞ்சலை குறிப்பிடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தபோதிலும் அது தொடர்பில், அந்த அமைச்சு இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
4 hours ago
5 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago
5 hours ago