2026 மே 02, சனிக்கிழமை

Z Score விவகாரம் மனுக்கள் தள்ளுபடி

Editorial   / 2020 டிசெம்பர் 24 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

2019ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின், பல்கலைக்கழக வெட்டுப்புள்ளியின் ( Z Score ) அடிப்படையில், பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுவதைத் தடுக்கக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் யாவும், விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமலே தள்ளுபடி செய்யப்பட்டன. 

 Z Score  அடிப்படையில், பொறியியல், பௌதீகவியல் ஆகிய இரண்டு பீடங்களுக்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுவதைத் தடுக்கக் கோரியே, உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. 

மனுக்கள் யாவும், உயர் நீதிமன்ற நீதியரசர்களான புவனெக அலுவிஹார, எஸ். துரைராஜா, யசந்த கோதாகொட ஆகியோர் முன்னிலையில் ஆராயப்பட்டன.  

2019ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில், புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் சித்தியடைந்த 42 மாணவர்களால் தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த மனுக்களில், இடைக்காலத் தடையுத்தரவு கோரப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 மனுக்களில், கல்வியமைச்சர், கல்வியமைச்சின் செயலாளர், பரீட்சைகள் ஆணையாளர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர்,

சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர். 
 Z Score புள்ளிகளின் அடிப்படையில், பழைய பாடத்திட்டத்துக்கும் புதிய பாடத்திட்டத்துக்கும் இடையிலான வித்தியாசம் விசாலமானது. ஆகையால், அந்த முறைமை வேண்டாம். அதனூடாகத் தங்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றன என்றும் மனுக்களில் குறிப்பிடப்பட்டிருந்தன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .