2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

5 வயது சிறுமி படுகொலை: DNA பரிசோதனைக்கு அனுமதி

Gavitha   / 2015 செப்டெம்பர் 21 , மு.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டதெனியாவ பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட ஐந்து வயது சிறுமியான செயா சந்தவமி, வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இருவரின் (டி.என்.ஏ.) மரபணுக்களையும் உயிரியல் விஞ்ஞான பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு அனுமதிக்குமாறு பொலிஸார், நீதிமன்றத்திடம் கோரியுள்ளனர்.

இந்த சிறுமி, வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் பட்டியொன்றினால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

கம்பஹா, கொட்டதெனியாவ, அகரங்கஹ பகுதியில் வெள்ளிக்கிழமை (11) இரவு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த வேளை காணாமல் போன 5 வயது சிறுமி, ஞாயிற்றுக்கிழமை(12) காலை சடலமாக மீட்கப்பட்டார்.

இதேவேளை,  5 வயதான செயா சந்தவமியின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர்களான கெலும் அத்தநாயக்க (வயது 33) மற்றும் 18 வயதான பாடசாலை மாணவன் ஆகிய இருவருமே எதிர்வரும் 28 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை நீதவான் டி.ஏ.ருவன் பத்திரண உத்தரவிட்டுள்ளார்.

அவ்விருவரிடமிருந்த பெறப்பட்ட டி.என்.ஏ.க்களையே உயிரியல் விஞ்ஞான பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு அனுமதிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X