Editorial / 2019 ஓகஸ்ட் 03 , பி.ப. 01:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்கு இன்று திட்டமிடப்பட்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட கூட்டம் சில சந்தர்ப்பங்களில் இடம்பெறுவதற்கு வாய்ப்பில்லை என, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்தார்.
உயர்பீட கூட்டம் இன்று இடம்பெறவுள்ளதாக கட்சியின் தலைவரான அமைச்சர் ரிஷாட் பதியூதீன் நேற்று முன்தினம் வவுனியாவில் தெரிவித்திருந்தார்.
எனினும், பல்வேறு பகுதிகளில் இடம்பெறும் கட்சியின் பொதுமக்கள் சந்திப்பின் காரணமாக இன்றைய தினம் கூட்டம் இடம்பெறுவது குறித்து உத்தியோகபூர்வ தகவல்கள் கிடைக்கவில்லை என, அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்தார்.
எவ்வாறிருப்பினும், எதிர்வரும் 5ஆம் திகதிக்கு முன்னதாக கட்சியின் உயர்பீட கூட்டத்தை நடத்தி, கூட்டணி தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago