Freelancer / 2026 ஜனவரி 08 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணைந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அ.தி.மு.க. கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் இ.பி.எஸ். தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் பா.ம.கவுடனான கூட்டணி குறித்தும் அ.தி.மு.க. பரிசீலித்து வந்தது.
இந்நிலையில், நேற்று காலை சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்றார்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், பா.ம.க. தலைவர் அன்புமணியும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவிக்கையில்,
ஏற்கெனவே அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி உறுதியாகிவிட்டது. இந்நிலையில் இந்தக் கூட்டணியில் பா.ம.க. இணைந்துள்ளது. இது இயற்கையான கூட்டணி. இந்தக் கூட்டணி அ.தி.மு.க. - பா.ம.க. கட்சியினர், தொண்டர்கள் விரும்பியவாறு அமைந்துள்ளது. இது வெற்றிக் கூட்டணி.
வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் விரோத தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற லட்சியத்தின் அடிப்படையில் ஒரு வலிமையான தமிழகத்தை உருவாக்க, மக்களுக்கு தேவையான திட்டத்தை கொடுக்கும் அரசு அமைய எங்களது கூட்டணி 234 தொகுதிகளிலும் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று, அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க. ஆகிய 3 கட்சிகளும் இணைந்து இரவு, பகல் பார்க்காமல் சுறுசுறுப்பாக செயல்பட்டு, மிகப்பெரிய வெற்றிபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். தொகுதிகள் எண்ணிக்கை முடிவு செய்துவிட்டோம். மற்றவை பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். (a)

40 minute ago
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
43 minute ago
2 hours ago