2026 மே 02, சனிக்கிழமை

அ​மேசனுக்கு ஆதரவாக ​அக்கரைப்பற்றில் பேரணி

Editorial   / 2019 செப்டெம்பர் 07 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.ஏ.றமீஸ்)

அமேசான் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தக்கோரி விழிப்புணர்வுப் பேரணி ஒன்று இன்று(07) அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றது.

வைத்திய அத்தியட்சகர் ஐ.எம்.ஜவாஹிரின் வழிகாட்டலின் கீழ் இடம்பெற்ற இவ்விழிப்புணர்வுப் பேரணியின்போது வைத்தியசாலையில் சேவையாற்றும் பெருந்தொகையான வைத்திய அதிகாரிகள், நிருவாகத்துறை உத்தியோகத்தர்கள், தாதி உத்தியோகத்தர்கள், சுகாதாரத்துறை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

வைத்தியசாலை வளாகத்தில் இருந்து ஆரம்பமான விழிப்புணர்வுப் பேரணி அக்கரைப்பற்று-கல்முனை பிரதான வீதி வழியாகச் சென்று மீண்டும் வைத்தியசாலை வளாகத்தினை சென்றடைந்தது.

அமேசான் காடுகளில் ஏற்பட்ட தீயினை கட்டுப்படுத்துவதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒன்றுபட்டு செயற்படுவதோடு, எதிர்கால சந்ததியினர் சுத்தமாக சுவாசிக்கக் கூடிய வகையில் காடுகளின் அழிவைத் தடுத்து நிறுத்த வேண்டுமென வலியுறுத்திய வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு பலர் பேரணியில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .