2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

அகமதாபாத் விமான விபத்து விசாரணைக்கு 3 மாதங்கள் அவகாசம்

Freelancer   / 2025 ஜூன் 15 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அகமதாபாத் விமான விபத்து குறித்த விசாரணைக்காக உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்துறைச் செயலாளர் தலைவராக இருப்பார். இந்தக் குழு அறிக்கை சமர்ப்பிக்க மூன்று மாத காலம் அவகாசம் வழங்கப்படும் என இந்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்

இது குறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு,

 கடந்த இரண்டு நாட்கள் மிகவும் கடினமாக இருந்தன. குறிப்பாக அமைச்சகத்துக்கும், மற்ற அனைவருக்கும் மிகவும் கடினமான சூழல் இருந்தது. அகமதாபாத்தில் நடந்த சம்பவம் முழு நாட்டையும் உலுக்கியுள்ளது. சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். நான் தனிப்பட்ட முறையில் என் தந்தையையும் ஒரு சாலை விபத்தில் இழந்துவிட்டேன். எனவே ஓரளவுக்கு, குடும்ப உறுப்பினர்கள் உணரும் வலியையும் வேதனையையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

இந்த விமான விபத்து குறித்த விசாரணைக்காக உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்துறைச் செயலாளர் தலைவராக இருப்பார். இந்தக் குழு அறிக்கை சமர்ப்பிக்க மூன்று மாதம் கால அவகாசம் வழங்கப்படும். அகமதாபாத் விமான விபத்தை அமைச்சகம் மிகுந்த தீவிரத்துடன் எடுத்துக்கொள்கிறது. நிலைமையை ஆய்வு செய்ய விமான விபத்து புலனாய்வுப் பணியக இயக்குநர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தார். விமான விபத்து குறித்த தகவல்கள் புலனாய்வுப் பிரிவால் உடனடியாகத் திரட்டப்பட்டது என்றார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .