2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட 10 பேர் கைது

Editorial   / 2020 பெப்ரவரி 10 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கலகெட்டிஹேனபகுதியில் புதையல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட 10 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கலகெட்டிஹேன, வீரகுல, கொழும்பு, மங்கலதிரிய, மீரிகம, பமுனுகம பிரதேசங்களை சேர்ந்த  34 தொடக்கம் 57 வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தே நபர்களிடம் இருந்து அகழ்வு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன், சந்தே நபர்களை கம்பஹா நீதவான் நீதிமன்றில் இன்று (10) முன்னிலைப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ள வீரகுல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .