2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

அங்குனுகொலபலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதிகள்

Freelancer   / 2025 ஏப்ரல் 23 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து, சுமார் 200 கைதிகள் அங்குனுகொலபலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

இதில் 26 பெண் கைதிகளும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாத்தறை சிறைச்சாலையில் 3 கைதிகளை வேறு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு முற்பட்டபோது அவர்களுடன் தங்கியிருந்தவர்கள் அதற்கு எதிர்ப்பை வெளியிட்ட நிலையில், நேற்றிரவு அங்கு அமைதியின்மை ஏற்பட்டிருந்தது. 

குறித்த அமைதியின்மை சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது. 

தற்போது நிலைமை முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X