2026 மே 09, சனிக்கிழமை

dd

அஞ்சுவதற்கு அவசியம் இல்லை

Editorial   / 2021 மே 14 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

    தடுப்பூசிகளின் பற்றாக்குறையை எண்ணி அஞ்சுவதற்கு எந்த அவசியமும் இல்லையென இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” தகுதிவாய்ந்த ஒவ்வொருவருக்கும்  சரியான நேரத்தில் கொவிட் -19 தடுப்பூசியானது செலுத்தப்படும்.

அத்துடன்  வெளிநாடுகளிலிருந்து தேவையான தடுப்பூசிகளை வாங்குவதற்குறிய  நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதோடு  ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் லலித் வீரதுங்க தலைமையிலான குழுவினர் , அஸ்ட்ராசெனேகா தடுப்பூசிகளை  வாங்குவதற்காக உலக நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

எனவே வெகு விரைவில்  அஸ்ட்ராசெனேகாவின் முதலாம் கட்ட  தடுப்பூசியை  செலுத்திக் கொண்டவர்கள் இரண்டாம் கட்ட தடுப்பூசியையும்  செலுத்திக்கொள்ள முடியும் ”என அவர் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .