2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

அடையாள அணிவகுப்புக்கு புதிய ஆடை

Menaka Mookandi   / 2016 நவம்பர் 09 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சந்தேகநபர்களை, அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தும் போது, புதியவகை ஆடையொன்றை அணிவித்து, முன்னிலைப்படுத்தி, சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதற்காக, விசேடமாக வடிவமைக்கப்பட்ட ஜெக்கெட் ஒன்றை பயன்படுத்தும் நடவடிக்கை, ஏற்கெனவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஷான் தனசிங்க தெரிவித்தார்.

இந்த விசேட ஆடை, அவுஸ்திரேலியாவிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை காலமும், சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த, துணியொன்றே போர்த்தப்பட்டு வந்ததென்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .