2026 மே 06, புதன்கிழமை

அடிப்படை எதிர்ப்பை முன்வைக்க உத்தரவு

R.Maheshwary   / 2021 ஏப்ரல் 27 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

2016ஆம் ஆண்டு ராஜகிரியவில் ஏற்பட்ட விபத்தொன்று தொடர்பில், முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக, சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படை எதிர்ப்பை எழுத்து மூலம் ஜூன் மாதம் 30ஆம் திகதி முன்வைக்க நடவடிக்கை எடுக்குமாறு, கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் கவனக்குறைவாக வாகனத்தை செலுத்தி, இளைஞர் ஒருவருக்கு பாரிய பாரிய காயங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டு, முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்கவுக்கு எதிராக தாக்கல்​ செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கானது, கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட​ போ​தே,இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் பிரதிவாதி சார்பில் ஆஜராகும் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்னவின் கனிஷ்டசட்டத்தரணியொருவரும் மற்றுமொரு சட்டத்தரணியும்  கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதால், சட்டத்தரணி அனுஜ பிரேமரத்னதனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று, இந்த வழக்கின் பிரதிவாதியாக சம்பிக்க ரணவக்க சார்பில் சட்டத்தரணி ரஜிக கொடிதுவக்கு மன்றில்அறிவித்தார்.

எனவே இந்த வழக்குடன் தொடர்புடைய அடிப்படை எதிர்ப்பை முன்வைப்பதற்கான திகதியை அறிவிக்குமாறு, ஜனாதிபதி சட்டத்தரணி பிரேமரத்ன தனக்கு அறிவித்ததாகவும் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தின் நேரத்தை மீதப்படுத்துவதற்காக இந்த வழக்குடன் தொடர்புடைய அடிப்படை எதிர்ப்பை கடிதம் மூலம் முன்வைப்பது சிறந்தது என, இதன்போது முறைப்பாட்டாளர்கள் சார்பில் ஆஜரான பிரதி சொலிஸிட்டர் நாயகம் திலிப பீரிஸ்,மன்றில் அறிவித்தார்.

எனவே இதனையடுத்து அடிப்படை எதிர்ப்பை கடிதம் மூலம் முன்வைக்கமாறு  நீதிபதி பலல்லே உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .