2026 மே 02, சனிக்கிழமை

அடிப்படை வசதிகளுக்காக தனியார் பிரிவுகளிடம் உதவி

R.Maheshwary   / 2020 டிசெம்பர் 16 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுற்றுலாப் பயணிகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்படும் போது, நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்குமானால், அதற்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்கான தனியார் பிரிவுகளின் ஒத்துழைப்பை பெற நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொது சுகாதாரம் தொடர்பான பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தற்போதும் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருபவர்களுக்கான பிசிஆர் பரிசோதனைகளுடன் தனியார் பிரிவுகள் தொடர்புபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வருபவர்களுக்கான பிசிஆர் பரிசோதனையை அரசாங்கமே முன்னெடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .