Gavitha / 2017 ஏப்ரல் 17 , பி.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
முஹம்மது முஸப்பிர்
முகத்துவாரத்தில், குளித்துக்கொண்டிருந்த அண்ணனும் தங்கையும் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சம்பவமொன்று, வென்னப்புவ, சின்தாத்திரிய முகத்துவாரத்தில் இடம்பெற்றுள்ளது.
வென்னப்புவ சின்தாத்திரிய பிரதேசத்தைச் சேர்ந்த நிஷானி பெர்ணான்டோ (வயது 17), மற்றும் ரன்திம பெர்னாண்டோ (வயது 15) ஆகிய இருவமே, ஞாயிற்றுக்கிழமை (16) இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
மாஓயா ஆறு, கடலில் கலக்கும், முகத்துவாரத்திலேயே இவ்விருவரும், இன்னும் சிலரும் குளித்துக்கொண்டிருந்துள்ளனர். இதன்போதே, இருவரும் நீரில் இழுத்துச்செல்லப்பட்ட மூழ்கி, உயிரிழந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என, பொலிஸார் தெரிவித்தனர்.
நீரில் மூழ்கிய இருவரையும், அங்கு குழுமியிருந்தவர்களும் பிரதேசவாசிகளும் காப்பாற்றுவதற்கு முயன்ற போதிலும், அந்த முயற்சி பயனளிக்கவில்லை. எனினும், அவ்விருவரும் சடலங்களாகவே மீட்கப்பட்டனர்.
அவ்விரு சடலங்களும், பிரதேச பரிசோதனைக்காக, மாரவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பில், தாம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக, வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .