Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஜூன் 24 , பி.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்ஷன் வினோத்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை கண்டறிவதற்காக சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வரும் நிலையில் தற்போது செம்மணியில் மேலுமொரு மனிதப் புதைகுழி கண்டறியப்பட்டுள்ளது.
யுத்தத்தின் போதும்,அதற்குப் பின்னரும் ஸ்ரீ லங்கா ஆயுத படைகளாலும் துணை இராணுவக் குழுக்காளாலும் கைது செய்யப்பட்டு மற்றும் அவர்களிடம் கையளிக்கப்பட்ட பின்னர் அல்லது அவர்களிடம் சரணடைந்த பின்னர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியலை வெளியிடு மாறும் மற்றும் இலங்கை அரச படைகளால் நடத்தப்படும் இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்
பெயர் பட்டியல்களை வெளியிடுமாறு,வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் அமைப்புக்களால் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்துள்ள போதும் இக் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
காணாமல் போனோர் அலுவலக உருவாக்கமானது சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கான ஸ்ரீலங்கா அரசின் கண்துடைப்பு நடவடிக்கையே என்பதனை அந்த அமைப்பின் செயற்பாடுகள் நிரூபித்துள்ளது.
இவ் அலுவலகமானது உண்மை,நீதி,மற்றும் பொறுப்புக்கூறலுக்கான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் நடைமுறைத் தேடலைத் தாமதப்படுத்துகின்றது.நீதி,மற்றும் பொறுப்புக்கூறல் தாமதத்தின் விளைவாக குற்றமிழைத்த அவர்களுக்கு தண்டனை வழங்கப்படாமையால், வலிந்து காணாமல் ஆக்குவதற்கான தலைமையை வழங்கியவர்களும் அதற்கான சித்தாந்த ரீதியான ஆதரவு வழங்கியோரும் இலங்கையின் ஆட்சி அதிகாரத்தில் அமர கூடியதாகவும் சுதந்திரமாக நடமாட கூடியதாகவும் உள்ளது.
ஸ்ரீ லங்காவின் நீதித் துறையும் காவல் துறையும் இனவாதமும் மதவாதமும் நிறைந்ததாகவும்,அரசியல் மயப்பட்டதாகவும் நம்பகத்தன்மை இழந்தும் காணப்படுகின்றது. அதே வேளை இக் குற்றங்களுடன் தொடர்புடைய ஸ்ரீ லங்காவின் ஆயுதப்படை தளபதிகள் மற்றும் உளவுப்பிரிவின் அதிகாரிகளுக்கு பதவி உயர்வுகள்,வெகுமதிகளும் அளிக்கப்பட்டுள்ளன.
அனைத்து நபர்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச மாநாட்டில் (ICPPED) குறிப்பிடப்பட்ட - தெரிந்து கொள்ளும் உரிமை,நீதிக்கான உரிமை, இழப்பீடு பெறுவதற்கான உரிமை,குற்றங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதற்கான உத்தரவாதம் போன்றவை தமிழர்களுக்கு வெற்று வார்த்தைகளாகவே இன்றும் உள்ளன.
உண்மை,நீதி,மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பாக நீண்ட கால தேடலுடன் போராட்டம் மிகவும் வேதனையான தாகும்.தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரி போராடும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள், ஸ்ரீ லங்காவின் உளவுத் துறையினரால் கண்காணிக்கப்பட்டு, இராணுவத்தினராலும் அவர்களுக்குத் துணைபோகும் பொலிஸாரால் மிரட்டல் மற்றும் துன்புறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி நீதி கோரிய போராட்டத்துடன் இணைந்திருந்த சுமார் 80 க்கும் அதிகமானவர்கள்,தங்கள் உறவுகளின் உண்மை நிலையை அறியாமலேயே மரணமடைந்துள்ளார் கள்.
2015 ஆம் ஆண்டில் இலங்கை கையெழுத்திட்ட - அனைத்து நபர்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச மாநாட்டில் 24 வது பிரிவு,காணாமல் போன நபரை மட்டுமல்ல,வலிந்து காணாமல் ஆக்க பட்டதன் விளைவாக பாதிக்கப்பட்ட அனைத்து நபர்களையும் பாதிக்கப்பட்டவர்களாக வரையறுக்கிறது.
போர் முடிவடைந்து 16 வருடங்களாகியும் ஸ்ரீ லங்காவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை யால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான - பொறுப்புக்கூறல் இல்லாமை மற்றும் தண்டனை இன்மையால் பாதிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கிடைக்கவில்லை.
இதனால்,இந்த குற்றங்களுக்கானபொறுப்புக்கூறலுக்காக இலங்கையை சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் மூலமாகவோ அல்லது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினுடாக வோவிசாரிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலையில் - தமிழ் மக்கள் மீதான இனவழிப்புக்கு சர்வதேச குற்றவியல் விசாரணையை வலியுறுத்தி அணையாவிளக்கு என்னும் பெயரில் சர்வதேசத்திடம் நீதிகோரும் போராட்டம் ;மக்கள் செயல்'என்னும் தன்னார்வ இளையோர் அமைப்பினால் யாழ் செம்மணிவளைவுப்; பகுதியில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
தமிழின அழிப்புக்கு பக்கச்சார் பற்ற சர்வதேச விசாரணையை முன்னெடுக்கவும் சர்வதேச குற்றவியில் நீதிமன்றுக்கு இலங்கையின் பொறுப்புக்கூறல் விவகாரத்தை பாரப்படுத்த ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் இந்தப் போராட்டத்துக்கு தமிழ் மக்கள் அணிதிரள வேண்டும் என்று அழைப்புவிடுக்கின்றோம்.
குறிப்பாக புதன்கிழமை (25) அன்று காலையில் 'மக்கள் செயல்'; அழைப்பின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள பேரணிக்கும் பேராதரவு வழங்கி கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்
23 Aug 2025
23 Aug 2025
23 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Aug 2025
23 Aug 2025
23 Aug 2025