2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

அதிகாரி திட்டியதால் இலங்கை அகதி மரணம்

Thipaan   / 2016 மார்ச் 07 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்நாட்டின் திருமங்கலம் அருகே, வருவாய்த்துறை அதிகாரி திட்டியதால் மனமுடைந்த இலங்கை அகதி, மின்கம்பத்தில் ஏறி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் செயல்பட்டு வருகிறது.

உச்சப்பட்டி முகாமில், 500 குடும்பங்களைச் சேர்ந்த, 2,000 பேர் உள்ளனர். இவர்களை, வருவாய் துறை மற்றும் கியூ பிரிவு பொலிஸார் கண்காணித்து வருகின்றனர். அகதிகள் இருப்பு விவரங்களை அறிய, ஓய்வு பெற்ற வருவாய் அலுவலர் நேற்று மதியம் சென்றார்.

அப்போது ரவிச்சந்திரன், அவரது மகன் பிரதீபன், 20, ஆகியோர் முகாமில் இல்லை. பிரதீபனுக்கு கீழே விழுந்து காயம் ஏற்பட்டதால், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரை பார்க்க ரவிச்சந்திரன் சென்றுள்ளதாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

ஆனால், அதை அலுவகர் ஏற்க மறுத்து, 'முகாமில் இல்லை' என பதிவு செய்ய முயன்றார்;. இதையறிந்து ரவிச்சந்திரன் முகாமுக்கு வந்தார். பிரதீபன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பற்றுச் சீட்டை வருவாய் அலுவலர் கேட்டதால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

மேலும், ரவிச்சந்திரனை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ரவிச்சந்திரன், உயிரிழந்தார்.

இதனால், ஆத்திரமடைந்த அகதிகள் வருவாய்த்துறை அதிகாரியை சரமாரியாக தாக்கியுள்ளனர். அவர்களை தடுக்க வந்த பொலிஸார் மீதும் தாக்குதலில் ஈடுபட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .