2025 செப்டெம்பர் 03, புதன்கிழமை

அதிவேக நெடுஞ்சாலை கோர விபத்து : இருவர் பலி

Freelancer   / 2025 செப்டெம்பர் 03 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் நகுலுகமுவ மற்றும் மீரிகமவுக்கு இடையே ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததுடன், ஒருவர் காயமடைந்ததாக அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்புக்கு பயணிக்கும் வீதியில் 41.1 ஆவது கிலோமீற்றர் பகுதியில் இரண்டு வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு வீதியை விட்டு விலகி, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எரிபொருள் தாங்கி ஊர்தியொன்றும் பாரவுவூர்தியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் எரிபொருள் தாங்கி ஊர்தியின் உதவியாளரும் பாரவூர்தியின் சாரதியுமே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. R 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .