2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

அதானியுடன் தொடர்ந்து பேச்சு

Freelancer   / 2025 மார்ச் 18 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் குறித்து அதானிக்கும் இலங்கை அரசுக்கும் இடையே தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக "தி இந்து" செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த திட்டங்களின் கட்டணங்கள் தொடர்பாக பரஸ்பர உடன்பாட்டை எட்டுவதற்கு உரிய கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் பூநகரி புதுப்பிக்கத்தக்க காற்றாலை திட்டத்தில் இருந்து கட்டணப் பிரச்சினை காரணமாக விலகுவதாக அதானி குழுமம் சமீபத்தில் எழுத்துப்பூர்வமாக அறிவித்திருந்தது.

ஆனால் குறித்த திட்டத்தை முற்றாக நிறுத்துவதற்கு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

கட்டணங்கள் தொடர்பாக பரஸ்பர உடன்பாடு ஏற்பட்ட பிறகு, ஜூன் மாதத்திற்குள் இந்தத் திட்டத்தின் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படக்கூடும் எனவும்  குறிப்பிடப்படுகின்றது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .