2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

dd

அதிக உயிரிழப்பு பட்டியலில் அமெரிக்கா 2ஆம் இடத்தில்

Editorial   / 2020 ஏப்ரல் 10 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக அளவில் கொரோனா வைரஸால் அதிக  உயிரிழப்புகளை சந்தித்த நாடுகள் பட்டியலில், அமெரிக்கா இரண்டாவது இடத்தில் உள்ளது. 

இதற்கமைய, அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட 33 ஆயிரத்து 536 பேர் நேற்று (09) இனங்காணப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாது, ஒரே நாளில் ஆயிரத்து 900 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆயிரத்து 697 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் அதிக உயிரிழப்புகளை சந்தித்துள்ள நாடுகள் பட்டியலில் இத்தாலி  முதலிடத்தில் உள்ளது. இதற்கமைய, அந்நாட்டில் 18 ஆயிரத்து 279 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .