Janu / 2025 பெப்ரவரி 03 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தை சேர்ந்த 29 வயதுடைய இளைஞன் ஒருவர் அதீத போதை காரணமாக சுகவீனமுற்று யாழ்.போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை (02) உயிரிழந்துள்ளார்.
இளைஞனின் உடற்கூற்று பரிசோதனையில் அதீத போதை பாவனை காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த இளைஞன் சிறு குற்ற செயல்களில் ஈடுபட்ட நிலையில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்ததையடுத்து ஓரிரு நாட்களுக்கு முன்னரே விடுவிக்கப்பட்டவர் என்றும், சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் நண்பர்களுடன் இணைந்து போதையை நுகர்ந்த நிலையிலையே, அதீத போதை காரணமாக சுகவீனமேற்பட்டது என பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், உயிரிழந்த இளைஞனுடன் சம்பவ தினத்தன்று போதையை நுகர்ந்த ஏனையவர்கள் தொடர்பிலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
17 Dec 2025
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 Dec 2025
17 Dec 2025
17 Dec 2025