2025 ஜூலை 17, வியாழக்கிழமை

அதிகளவு தொற்றாளர்கள் நேற்று பதிவு

Editorial   / 2020 ஏப்ரல் 27 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர் எண்ணிக்கை நேற்று இரவு 500ஐ தாண்டியது.

தற்போது வரை அந்த எண்ணிக்கை 523ஆக அதிகரித்துள்ளது. நேற்று மாத்திரம் 63 பேர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதுவே, இலங்கையில் ஒரு நாளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அதிகளவு நபர்கள் பதிவான நாளாகும்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 396 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதுவரை கொரோனா தொற்று என உறுதிப்படுத்த முடியாத நிலையில் தொற்று சந்தேகத்தில் 273 பேர் வைத்திய சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 120ஆகும்.

அத்துடன், இலங்கையில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X