Freelancer / 2022 டிசெம்பர் 17 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தக் கோரும் தமிழ் தலைமைகளும், அதே நிலைப்பாட்டிலுள்ள முஸ்லிம் தலைமையும் இணைந்த வட கிழக்கில் முஸ்லிம்களுக்கான அதிகார பகிர்வு என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டுமென அமைச்சர் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அமைச்சர் நசீர் அஹமட், இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதில் தாம் கரிசனை கொண்டுள்ள போதிலும், அதுவே முஸ்லிம் சமூகத்திற்கு பிரச்சினையாகிவிடக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து சமஷ்டி கோரும் தரப்புக்கள் இணைந்த வட, கிழக்கில் முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் அதிகாரம் என்னவென்பது பற்றி மனம் திறப்பது அவசியமெனவும் முஸ்லிம் மக்களின் மனநிலையை புரிந்துகொண்டு பேசுவதே சிறந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். (a)
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago