Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஜூலை 29 , மு.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
"அபிராமி மேல எங்களுக்கு எந்த சந்தேகமும் வந்ததில்லை ஒருவேளை தவறான விஷயம் தெரிந்திருந்தால், அவர்களை அப்போதே வீட்டை காலி செய்ய சொல்லியிருப்போம். முன்தினம் இரவு வரை எங்களுடன்தான் அபிராமியின் குழந்தைகள் இருந்தார்கள். மறுநாள் விடிகாலையில் 5.30 மணிக்கு குழந்தை அழுகிற சத்தம் கேட்டது. அப்புறம்தான் இந்த விஷயம் எங்களுக்கு தெரியவந்தது" என்று கதறி அழுது கொண்டே சொல்கிறார்கள், அபிராமி குடியிருந்த வீட்டின் உரிமையாளர்கள்.
குன்றத்தூர் அபிராமிக்கு தற்போது தண்டனை கிடைத்துள்ளது.. இந்த தண்டனை வரவேற்புக்குரியதாக இருந்தாலும், ஏன் தூக்கு தண்டனை தரப்படவில்லை என்ற கேள்வி தமிழக மக்களின் நெஞ்சில் எழுந்தவாறே உள்ளது.
இந்நிலையில், குடியிருந்த வீட்டின் உரிமையாளர், செய்தியாளர்களிடம் தங்கள் குமுறலை கொட்டி உள்ளனர்.. அப்போது ஹவுஸ் ஓனர் தம்பதி இருவருமே கதறி அழுதவாறே, அபிராமியின் குழந்தைகளை பற்றி சொல்லியிருப்பது, கேட்பேரை நிலைகுலைய வைத்து வருகிறது..
செய்தியாளர்களிடம் அவர்கள் பேசும்போது,
"அபிராமிக்கு ஆண் குழந்தை பிறந்து 3 மாதமாகி இருந்தபோதுதான், இங்கு குடிவந்தார்கள்.. 2வது குழந்தையும் இதே வீட்டில்தான் பிறந்தது.. நன்றாகத்தான் குடும்பமாக இருந்தார்கள்.
அதற்கு பிறகுதான், அபிராமி வீட்டிலேயே இருக்க மாட்டார். எப்போதுமே டூவீலரில் வெளியில் சென்று வந்தபடியே இருப்பார்.. காலையில் போனால் சாயங்காலம் வருவது, நைட்டு போவது என்று டூவீலரியிலேயே பறந்தார்.. சொகுசு வாழ்க்கையையே வாழ்ந்து வந்தார்..
ஆனால், இப்படியொரு காரியத்தை செய்துவிட்டு போவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவேயில்லை.. குழந்தைகளை அவர் வளர்த்து வந்ததை பார்த்தால், அப்படி செய்யக்கூடியவர் என்றே சொல்ல முடியாது.
ஒருவேளை, குழந்தைகளிடம் பாசமாக இருப்பதுபோல நடித்து வந்தாரா? என்று தெரியவில்லை. அந்த குழந்தைகள் இறந்ததை ஜீரணிக்கவே முடியல.. என் குரலை கேட்டாலே அத்தை அத்தைன்னு ஓடிவந்துரும்.. அந்த குழந்தைகள் இறப்பிலிருந்து என்னால் மீளவே முடியல.. எங்க கிட்ட தந்திருந்தால்கூட, 2 குழந்தைகளையும் நாங்கள் வளர்த்திருப்போம்.. கொலை செய்யப்படுவதற்கு முன்தினம்கூட, அந்த குழந்தை என்கூடவேதான் இருந்தது.
அதிலும் அபிராமியின் மகன், இங்கிலீஷ்லேயே பேசுவான்.. என்கிட்ட எது கேட்டாலும் இங்கிலீஷில்தான் கேட்பான்.. என்கிட்டதான் சாப்பிடுவாங்க.. நாங்களும் பிள்ளைகளுக்கு ஊட்டிவிட்டுதான் சாப்பிடுவோம்.. யார் கிட்டயாவது குழந்தைகளை தந்துட்டு போயிருக்கலாம்.. ஆனால், அபிராமி மேல சந்தேகமே வரல.. தவறான விஷயம் தெரிந்திருந்தால், அவர்களை அப்போதே வீட்டை காலி செய்ய சொல்லியிருப்போம்..
முன்தினம் இரவு வரை எங்களுடன்தான் குழந்தைகள் இருந்தார்கள்.. மறுநாள் விடிகாலையில் 5.30 மணிக்கு குழந்தை அழுகிற சத்தம் கேட்டது..அப்புறம்தான் இந்த விஷயம் எங்களுக்கு தெரியவந்தது.
அபிராமி கணவர் விஜய்க்கு, அப்பா அம்மா கிடையாது.. எங்களைதான் அப்பா, அம்மா நினைத்தார்.. ரொம்ப கஷ்டப்பட்டுதான் அவரது குடும்பத்தை காப்பாற்றி வந்தார்.. வாடகையைகூட 3 மாதத்துக்கு ஒருமுறைதான் தருவார்.. நம்ம பிள்ளைதானே? என்று நினைத்து விட்டுவிடுவோம்.. டூவீலரை அபிராமிக்கு வாங்கி தந்ததிலிருந்துதான், பிரச்சனை அதிகமாகியிருக்கிறது.
வாடகை தராமல் இருந்ததால், ஒருகட்டத்தில் வீட்டை காலி பண்ணிடு என்றுகூட பலமுறை சொல்லியிருக்கிறேன்.. "என் அப்பா வீட்டை விட்டுட்டு நான் எங்கே போவேன்? ஏன் போகணும்?" என்று என்னிடமே கேட்பார்..
என் மகனை போலவே பார்த்து கொண்டேன்.. அன்று கஷ்டப்பட்ட விஜய்க்கு இன்று நல்ல வருமானம்.. கஷ்டப்பட்டபோது, விஜய்க்கு உறுதுணையாக அந்த பெண் இல்லாமல் இப்படி செய்துவிட்டர்.. நைட் வேலை முடிந்து 10 மணிக்கு வந்தாலும், விஜய்தான் துணிகளை துவைப்பார். அந்த குழந்தைகளை என்னால மறக்க முடியல..எங்களுடைய அப்பா, அம்மா இறந்ததுக்குகூட இப்படி நாங்கள் அழுததில்லை..
இந்த சம்பவம் நடந்ததற்கு 2 நாள் முன்புதான், வீட்டுக்கு யாரோ ஒருவர், வந்து செல்வதாக எனக்கு தெரியவந்தது.. அப்பக்கூட வீட்டை காலி செய்துட சொன்னேன்.. ஆனால், இப்படி நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவேயில்லையே" என்று கண்ணீர்விட்டு கூறியிருக்கிறார். R
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago