Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2024 பெப்ரவரி 09 , பி.ப. 07:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி கண்டி - பல்லேகலை மைதானத்தில் இன்று இடம்பெறுகின்றது.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட்டுக்களை இழந்து 381 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில் பெத்தும் நிஸ்ஸங்க 210 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இவர் பெற்ற முதலாவது இரட்டை சதம் இதுவாகும்.
இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இரட்டை சதம் கடந்த முதல் வீரர் பெத்தும் நிஸ்ஸங்க ஆவார்.
அத்துடன், அவிஸ்க பெர்னாண்டோ 88 ஓட்டங்களையும், சதீர சமரவிக்ரம 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணியின் மொஹம்மட் நபி 44 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.
இந்தநிலையில், ஆப்கானிஸ்தான் அணி 382 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடுகின்றது. R
44 minute ago
49 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
49 minute ago
55 minute ago