2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

அந்நிய அழைப்புகளுக்கு பதிலளிக்காதீர்கள்!

George   / 2016 ஜனவரி 30 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிஷ்ட இலாபச் சீட்டிழுப்பில் நீங்கள் வெற்றிப்பெற்றதாககூறி வெளிநாடுகளில் இருந்து வரும் அழைப்புகளுக்கோ அல்லது குறுஞ்செய்திகளுக்கோ பதில் அளிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு தொலை தொடர்புகள் மற்றும் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

பொதுமக்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான போலி வெளிநாட்டு அழைப்புகள் தொடர்பில் நாட்டின் பல பாகங்களில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அடுத்து, அந்த ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.

அது தொடர்பில் நாடு முழுவதுமுள்ள  பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களுக்கு தெளிவினை வழங்க போஸ்டர் ஒட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆணைக்குழு கூறியுள்ளது.

அவ்வாறான சம்பவங்கள தொடர்பில்,  1900 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தெரியப்படுத்துமாறும் தொலை தொடர்புகள் மற்றும் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X