2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

அநுராதபுரம் கரும்புலித் தாக்குதலில் ரூ. 400 மில். நட்டம்

Gavitha   / 2016 மார்ச் 08 , மு.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 2007ஆம் ஆண்டில், அநுராதபுரம் விமானப்படைத்தளத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலித் தாக்குதல் காரணமாக, 400 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது என நேற்று திங்கட்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பான வழக்கு, அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, இந்த நட்டத்தொகை தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளால், வான் மற்றும் தரை வழியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இதனால், விமானப்படைத் தளத்தின் விமான ஓடுபாதையில் தரித்து வைக்கப்பட்டிருந்த 10 விமானங்கள் அழிக்கப்பட்டதுடன் மேலும் 6 விமானங்கள், பகுதியளவில் சேதமடைந்தன.

புலிகள் இயக்கத்தின் தற்கொலைத் தாக்குதல்காரர்களால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் காரணமாக, 14 வீரர்கள் ஸ்தலத்திலேயே பலியாகினர்.

இந்தத் தாக்குதல், 2007 ஒக்டோபர் 22ஆம் திகதி அதிகாலை நடத்தப்பட்டது. யுத்தம் இடம்பெற்ற மூன்று தசாப்தங்களில், உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் பெரிதும் பேசப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலாகவே இந்தத் தாக்குதல் காணப்பட்டது.

இந்தத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை, பயங்கரவாத குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் இரகசியப் பொலிஸாருமே விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையிலேயே, இது தொடர்பான வழக்கு விசாரணை, நேற்று இடம்பெற்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .