2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

அநுராதபுரத்தில் 14 வயதான சிறுமி 13 நபர்களால் பாலியல் துஷ்பிரயோகம்

Freelancer   / 2024 மார்ச் 18 , பி.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம் பிரதேசத்தில் உள்ள சிகை அலங்கார நிலையமொன்றில் வைத்து 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம்  விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை  குறித்த சிகை அலங்கார நிலையத்தின் உரிமையாளரும் மற்றுமொரு நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரும் அநுராதபுரம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இது தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த சிகை அலங்கார நிலையத்திற்கு பின்புறத்தில் உள்ள அறையொன்றிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் உட்பட மேலும் 11 சந்தேக நபர்கள் தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி, பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர்களில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் 70 வயதுடைய தந்தையும் உள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய 11 சந்தேக நபர்களையும் கைது செய்வது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .