2025 ஜூலை 16, புதன்கிழமை

அநாவசியமாக நடமாடினால் கடும் நடவடிக்கை

Editorial   / 2020 ஏப்ரல் 16 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு ஊரடங்கு தளர்த்தப்பட்ட பகுதிகளில் மக்கள் சரியான முறையில் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுகிறார்களா என்பதை கண்டறிந்து, சுகாதார ஆலோசனைகளை பின்பற்றாத நபர்களை திருப்பியனுப்ப பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

குறிப்பாக முக கவசத்தை அணியாமல் வீதிகளில் பயணிப்போரை திருப்பி அனுப்ப நடவடிககை எடுத்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய செனாரட்ன தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள காலப்பகுதியில் வீதிகளில் அநாவசியமாக நடமாடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .