2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

அந்நிய செலாவணி கையிருப்பு வீழ்ச்சி

Freelancer   / 2022 செப்டெம்பர் 09 , மு.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த வருடத்தின் ஓகஸ்ட் மாதத்தில் இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு 1.716 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

ஜூலை மாதத்தில் 1.817 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த அந்நிய செலாவணி கையிருப்பு ஓகஸ்ட் மாதத்தில் குறைவடைந்துள்ளமை மத்திய வங்கி தரவுகள் மூலம் தெரியவருகிறது.

இலங்கையின் மொத்த அந்நிய செலாவணி கையிருப்பானது, இந்த வருடம் மார்ச் மாதம் முதல் 1.9 முதல் 1.8 பில்லியன் டொவர்களுக்கு இடையில் ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுகிறது.

முந்தைய கையிருப்புகள் தீர்ந்துள்ள நிலையில், மீதமுள்ள மொத்த கையிருப்புகளில் பெரும்பாலானவை சீன மக்கள் வங்கியின் இடமாற்று வரியிலிருந்து பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .