Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 10 , பி.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் அரசாங்கம் தெளிவுப்படுத்தியுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்தப்பில் அமைச்சரவை இணைப் பேச்சாளர் பந்துல குணவர்தன, இது குறித்து இன்று (10) தௌிவுபடுத்தியுள்ளார்.
45 வயது வரை அரசின் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருப்பின் அல்லது பட்டதாரிக்கு இணையான உயர் டிப்ளோமா இருப்பின் பிரதேச செயலக மட்டத்தில் அரச தொழில் வழங்குவதற்கு இதன்மூலம் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.
தலைமைத்துவப் பயிற்சி மற்றும் ஏனைய பயிற்சிகள் வழங்கப்படும் ஓராண்டு காலப்பகுதியில் 20,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
அதன்பின்னர் பிரதேசத்திற்குள் காணப்படும் வேலைவாய்ப்புகளுக்கு ஏற்றவாறு, நிரந்தர நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
5 வருடங்களுக்கு இடமாற்றம் பெற முடியாது. இதற்காக விண்ணப்பிப்பதற்கான கால எல்லை எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago