Editorial / 2019 செப்டெம்பர் 11 , பி.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
சில சட்டங்கள் மற்றும் கட்டளை சட்டங்களில் அடங்கியுள்ள ஒழுங்கு விதிகளை மீறுவது தொடர்பில் விதிக்கப்படும் அபராத தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒழுங்கு விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக தற்போது விதிக்கப்படும் அபராத தொகையானது, சட்டத்தை மீறுவதை தடுப்பதற்காக எந்த வகையிலும் போதுமானதல்ல என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அபராத தொகையை அதிகரிப்பது தொடர்பான சிபாரிசை சமர்ப்பிப்பதற்காக முன்னாள் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரினால் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
இந்த குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சிபாரிசுக்கமைவாக பிணை சட்டத்தின் குறிப்பிடப்பட்டுள்ள அபராத தொகையை அதிகரிப்பது தொடர்பில் திருத்த சட்டமூல வரைவு பிரிவுக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரால் இது தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
6 hours ago
8 hours ago
8 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
8 hours ago
02 May 2026