2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

அமைச்சராகிறார் தொண்டமான்?

Kanagaraj   / 2016 ஜூன் 15 , மு.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகித்துக்கொண்டு, ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்ஷவுக்கும் ஆதரவளித்துக் கொண்டிருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஐக்கிய தேசிய முன்னணியின் தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க இணங்கியுள்ளதாக அறிய முடிகின்றது.

அரசாங்கத்துடன் இணைந்ததன் பின்னர், காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட
எம்.பியுமான ஆறுமுகன் தொண்டமானுக்கு, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியொன்று வழங்கப்படவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கு மேலதிகமாக, காங்கிரஸுக்குபிரதியமைச்சர் பதவியொன்றும் வழங்கப்படவிருப்பதாக அத்தகவல் தெரிவித்தது.

சபை நடவடிக்கைகளில் பங்கேற்கமால் இருப்பதற்காக, மூன்று மாதங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள ஆறுமுகன் தொண்டமான், இரண்டொரு வாரத்துக்குள் நாடுதிரும்பி, ஜனாதிபதி மற்றும் பிரதமரைச் சந்தித்து கலந்துரையாடியதன் பின்னரே, அரசாங்கத்துடன் இணைந்துகொள்வார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்றத்தில், நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்டிருந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்
தலைவரும் எம்.பியுமான முத்து சிவலிங்கம், எதிர்த்து வாக்களித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .