2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

அமைச்சரவை அதிகரிக்கவேண்டாமென மனுத்தாக்கல்

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 10 , பி.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சரவைக்கு மேலும் அமைச்சர்களை நியமிக்கவேண்டாம் என்று ஜனாதிபதிக்கு கட்டளையிட்டு இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமைச்சரவைக்காக 30 அமைச்சர்களுக்கு மேலாக எண்ணிக்கையை நியமித்தமையின் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன்னுடைய அடிப்படை உரிமையை மீறிவிட்டார் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹந்தபான்கொடவை வசிப்பிமாக கொண்ட சட்டத்தரணி அருண லக்சிறியினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், பிரதிவாதிகளாக ஜனாதிபதி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 17ஆம் திகதி நடத்தப்பட்ட பொதுத்தேர்தலின் போது வாக்காளர் என்றவகையில் வாக்கை தான் பயன்படுத்தியதாகவும் தேர்தல் பெறுபேறுகள் வெளியான திகதியிலிருந்து இதுவரையிலும் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கோ, அந்த தேசிய அரசாங்கத்தின் தலைமையாகவோ ஜனாதிபதி செயற்படவில்லை என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி, புதிய அரசாங்கத்தின் தலைவராக இருந்தபோதும் அவர், தேசிய அரசாங்கத்தின் தலைவராக இருப்பதற்கு அவருக்கு எந்த உரிமையும் கிடையாது என்றும் அந்த மனுவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகையால் இந்த மனுவை விசாரணைக்கு உட்படுத்துமாறும், புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டமை அரசியலமைப்பை மீறியே செய்யப்பட்டுள்ளது என்று அறிவிக்குமாறு மனுதாரர், உயர்நீதிமன்றத்தில் கோரியுள்ளார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .