2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

அமைதியாக இருக்க முடியாது: மஹிந்த

Thipaan   / 2015 டிசெம்பர் 20 , பி.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் இடம்பெற்றுவரும் மாற்றங்கள் குறித்து, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் இணைந்த எதிர்க்கட்சியும் அமைதியாக இருக்க முடியாதென, முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

லங்கா சம சமாஜக் கட்சியின் 80ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தக் காலகட்டத்தில், கப்பல்களில் பொருட்கள் கொண்டுவரப்படும்வரை காத்திருக்கும் யுகம் வந்துள்ளதாக, அவர் குறிப்பிட்டார்.

'சீருடைகளுக்குப் பதிலாக கூப்பன்கள் வழங்கப்படும் காலமிது, அத்தோடு, கூப்பன்களிலிருந்து பெறப்படும் பொருட்களின் பெறுமதியை விட, அவற்றைப் பெற்றுக் கொள்வதற்காகப் பெற்றோர்கள் செலவழிக்கும் பணம் அதிகமாகும்' என அவர் தெரிவித்தார்.

மேலும் தெரிவித்த அவர், நாடானது இன அடிப்படையில் மீண்டும் பிளவுபடுமெனத் தெரிவித்த அவர், அபிவிருத்தியானது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

'பணத்தில் 90 சதவீதத்தை நாம் எடுத்துக் கொண்டு, எஞ்சியுள்ள 10 சதவீதத்திலேயே நாம் வீதிகளை அமைத்ததாக அவர் கூறினார்கள். நாங்கள், தங்கத்திலா வீதிகளை அமைப்பதாகக் கேட்டார்கள். நாம் கொண்டுவந்த திட்டமான கொழும்பு - கண்டி நெடுஞ்சாலையை, ஆரம்பத்தில் நாம் பிரேரித்த பணத்திலிருந்து 10 சதவீதப் பணத்தில் அமைக்கவுள்ளதாகத் தெரிவித்தனர். இப்போது, நெடுஞ்சாலையின் செலவாக, 4 பில்லியன் ரூபாய் எனத் தெரிவிக்கின்றனர்' என மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

லங்கா சம சமாஜக் கட்சி போன்ற இடதுசாரிக் கட்சிகள், தற்போதைய அரசாங்கத்துக்கெதிரான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டுமெனத் தெரிவித்த அவர், இக்கட்சியானது, நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்படாத போதிலும், மக்களிடமிருந்து எடுத்துச்செல்லப்பட முடியாது எனவும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X