2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

அமெரிக்காவின் சான்டா பாப்ரா கொழும்புக்கு வருகிறது

Editorial   / 2025 ஓகஸ்ட் 15 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 கரைக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் செயற்படும் (லிட்டோரல்) சுயாதீன மாற்றுருபோர்க்கப்பலான யுஎஸ்எஸ் சான்டா பாப்ரா(LCS 32) ஓகஸ்ட் 16ஆம் திகதி கொழும்புத் துறைமுகத்திற்கு வருகைதரவிருப்பதை இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறியத்தருகிறது.

கொழும்புத் துறைமுகத்திற்கு யுஎஸ்எஸ் சான்டா பாப்ரா வருகைதரும் முதலாவதுசந்தர்ப்பம் இதுவாகும். அமெரிக்க-இலங்கை பங்காண்மையின் உறுதியினையும், பாதுகாப்பான, வளமான மற்றும் சுதந்திரமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான எமது பகிரப்பட்ட அர்ப்பணிப்பினையும் இந்த வருகை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

 

எமது கடற்படைகளுக்கு இடையிலான நீண்டகால உறவுகளையும், எமது உறவை வரையறுக்கும் நெருக்கமான ஒத்துழைப்பையும்இது பிரதிபலிக்கிறது. கப்பல் தனது பயணத்தை மீண்டும் தொடர்வதற்கு முன்பு எரிபொருள் நிரப்புவதற்கும் மற்றும் ஏனைய தேவையான பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்குமான ஒரு குறுகிய நிறுத்தமாக கொழும்பு செயற்படும்.

அமெரிக்க 7ஆவது கப்பற்படையின் ஓர் அங்கமான யுஎஸ்எஸ் சான்டா பாப்ரா (LCS 32), நட்பு நாடுகள் மற்றும் பங்காளர்களுடனான ஈடுபாடுகள் ஊடாக பிராந்திய ஸ்திரத்தன்மையினையும் கடல்சார் பாதுகாப்பினையும் மேம்படுத்தும் அதே வேளை, மேற்கு பசிபிக் மற்றும் இந்து சமுத்திரம் ஆகிய பெருங்கடல்களில் அதன் படைகளுக்கு நடவடிக்கைக் கட்டுப்பாடு மற்றும் திட்டமிடலை வழங்குவதை முதன்மை செயற்பணியாகக் கொண்டுள்ள, உலகின் மிகப்பெரிய முன்னோக்கி அணிவகுக்கப்பட்டகப்பற்படையினை வழிநடத்துகிறது.

“யுஎஸ்எஸ் சான்டா பாப்ரா இலங்கைக்கு வருகை தருவதானது, அமெரிக்க-இலங்கை பங்காண்மையின் சக்திவாய்ந்த ஒரு அடையாளமாகும். கடற்படையின் மிகப்பெரிய முன்னோக்கி அணிவகுக்கப்பட்ட கப்பற்படையான அமெரிக்க 7ஆவது கப்பற்படையின் ஒரு பகுதியான இக்கப்பலின் வருகையானது, கடல்சார் பாதுகாப்பு, பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியம் ஆகியவற்றிற்கான எமது பகிரப்பட்ட உறுதிப்பாட்டினை பிரதிபலிக்கிறது,” என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் தெரிவித்தார். “பிராந்தியம் முழுவதும் அமைதியையும், செழிப்பையும் மேம்படுத்துவதற்கு நாங்கள் ஒன்றிணைந்து பணியாற்றுகையில் இலங்கையுடன் இணைந்து நிற்பதில் நாங்கள் பெருமையடைகிறோம்.” என அவர் மேலும் தெரிவித்தார்.

யுஎஸ்எஸ் சான்டா பாப்ரா என்பது கரைக்கு அருகிலுள்ள கடற்பிராந்தியங்களில் செயற்படுவதற்காகவும், முன்னோக்கியபிரசன்னம், கடல்சார் பாதுகாப்பு, கடல் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றிற்கு உதவி செய்வதற்காகவும் வடிவமைக்கப்பட்ட ஒரு சுயாதீன திரிபுருவ லிட்டோரல் வகை போர்க்கப்பலாகும்.2021, ஒக்டோபர்16ஆம் தேதி பெயர் சூட்டப்பட்டுசேவையில்இணைத்துக்கொள்ளப்பட்டஇக்கப்பலானது தற்போது Destroyer Squadron (DESRON) 7இன் ஒரு அங்கமாகசெயற்படுகிறது. ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்காகவும், கூட்டணிகள் மற்றும் பங்காண்மைகளை பலப்படுத்துவதற்காகவும், எதிர்கால போரிடும் திறன்களை மேம்படுத்துவதற்காகவும் சான்டா பாப்ரா இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் வழக்கமான ரோந்துகளை மேற்கொள்கிறது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .