Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 நவம்பர் 07 , மு.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
இசை மேதை பண்டித் டபிள்யு. டீ அமரதேவவின் தொலைநோக்கை, நாட்டின் எதிர்காலத் தலைமுறையிடம் எடுத்துச்செல்வதற்கு ‘அமரதேவ நுண்கலை மத்திய நிலையம்’ என்ற பெயரில் ஒரு தேசிய கேந்திர நிலையத்தை ஸ்தாபிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இதற்குத் தேவையான வழிகாட்டல்களை அரசாங்கத்துக்கு வழங்குமாறு ஜனாதிபதி, கலைஞர்களிடம் கேட்டுக்கொண்டார்.
தேசத்தை எழுச்சிபெறச் செய்த மிகப்பெரும் கலைஞரான காலம்சென்ற டபிள்யு.டீ அமரதேவவின் இறுதிக் கிரியை, பூரண அரச மரியாதையுடன், கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் கடந்த சனிக்கிழமை (05) பிற்பகல் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு இரங்கல் உரை நிகழ்த்தும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இரங்கல் உரையில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,
பண்டித் அமரதேவ, தேசத்தை எழுச்சிபெறச் செய்த ஒரு யுக புருஷர் ஆவார். அவருக்கு நிகரான ஒரு கலைஞர் இந்த யுகத்தில் தோன்றவில்லை என பேராசிரியர் சுனில் ஆரியரட்ண கூறினார். நாம் அனைவருமே அதனை வாதப் பிரதிவாதங்களின்றி ஏற்றுக்கொள்வோம் என நான் நினைக்கிறேன்.
அமரதேவவின் உடல் எம்மைவிட்டுப் பிரிந்தாலும் அவரது தொலைநோக்கும் அவரது கம்பீரக் குரலின் வலிமையும் என்றும் அழியாமல் நிலைத்திருக்குமென நான் நம்புகிறேன்.
மிகப்பெரிய கலைஞர் என்ற வகையில் அவர் தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் பல விருதுகளைப் பெற்றுக்கொண்டார். அவரது குரல் வளமும் இசை அறிவும் இந்த நாட்டின் கலைஞர்கள், அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள், பாடசலைப் பிள்ளைகள், சாதாரண பொது மக்கள் ஆகிய அனைத்துத் தரப்பினரிடத்திலும் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. எனவே, இந்த நாட்டு மக்கள் மத்தியில் அவருக்குத் தனிப்பெரும் மரியாதையும் ஓர் உயர்ந்த இடமும் இருந்தது’ என்றார்.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago