2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

அமெரிக்க வரி குறித்து இலங்கை வர்த்தக சம்மேளம் வெளியிட்ட அறிக்கை

Freelancer   / 2025 ஜூலை 10 , பி.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க விதித்திருந்த 44% தீர்வை வரியை 30% ஆகக் குறைத்தமைக்கு இலங்கை வர்த்தக சம்மேளனம் (CCC) தனது பாராட்டைத் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட இலங்கை வர்த்தக சம்மேளனம், 

இந்த வரிக் குறைப்பை மேலும் குறைப்பதற்கு அமெரிக்க நிர்வாகத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்தை  கேட்டுக்கொண்டுள்ளது. 

அமெரிக்காவிற்கான ஏற்றுமதிக்கான பிராந்திய போட்டியாளர்களின் கட்டணக் கட்டமைப்பை நெருக்கமாகக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் எடுத்த ஒரு பயனுள்ள மற்றும் முக்கியமான முதல் படியாக கட்டணக் குறைப்பைக் கருதுவதாக தெரிவித்துள்ளது. 

குறிப்பாக, பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகள் இதைவிடக் குறைந்த வரி வீதங்களில் பயனடைய வாய்ப்புள்ளதால், ஓகஸ்ட் 1 ஆம் திகதிக்கு முன்னர் மேலும் வரிக் குறைப்பைப் பெறுவதற்கு அமெரிக்க நிர்வாகத்துடன் தொடர்ந்து ஆலோசனைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்தை சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது. 

மேலும், பயனுள்ள உரையாடல்கள், தொழில்துறை கருத்துகள் மற்றும் ஒருங்கிணைந்த ஆலோசனைகள் மூலம் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்கத் தயாராக இருப்பதாகவும் இலங்கை வர்த்தக சம்மேளனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .