2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

அமெரிக்கா செல்கின்றார் பஸில்

Freelancer   / 2022 செப்டெம்பர் 09 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஸ அமெரிக்கா செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதி, அவர் அமெரிக்கா செல்வதற்காக அதிகாலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார், ஆனால் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக தனது அமெரிக்க பயணத்தை ரத்து செய்தார்.

மேலும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால் அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது.

ஆனால், சமீபத்தில் நீதிமன்றத் தடை தளர்த்தப்பட்டு ஜனவரி மாதம் வரை அவர் வெளிநாடு செல்லத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது.

அதன்படி தற்போது கட்டுநாயக்க வந்துள்ள அவர் முதலில் டுபாய் சென்று பின்னர் அமெரிக்கா செல்ல உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .