2025 மே 22, வியாழக்கிழமை

அமெரிக்காவின் புதிய வரி மார்ச் 4 முதல் அமுல்

Freelancer   / 2025 மார்ச் 02 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனடா, சீனா, மெக்சிகோ ஆகிய நாடுகளின் மீதான புதிய வரி விதிப்பு மார்ச் 4 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
 
அமெரிக்காவின் பொருளாதாரத்தை பாதுகாக்கவும், சீனாவின் வர்த்தக முறைகேடுகளை தடுக்கவும் சீனா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகளுக்கும் புதிய வரி விதிப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
 
இந்த வரி விதிப்பு பெப்ரவரி மாதம் அமலுக்கு வருவதாக அறிவித்திருந்த நிலையில், மேலும் ஒருமாத கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
 
இந்த நிலையில், மார்ச் 4 ஆம் திகதி முதல் இந்த புதிய வரி விதிப்பு அமலுக்கு வருவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X