2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி

Freelancer   / 2022 ஓகஸ்ட் 22 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பலாங்கொடை -  தெல்துவவில் உள்ள உணவு விடுதி ஒன்றில் நேற்று (21) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர்கள் அம்பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது விருந்தகத்தின் மேல்மாடியில் 4 பேர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரீ-56 ரக துப்பாக்கியை பயன்படுத்தியே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

அம்பலாங்கொடையில் ஒரு மாதத்திற்குள் இடம்பெற்ற மூன்றாவது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இதுவாகும்.  (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .